சீன ஜனாதிபதி – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடல்!

சீன ஜனாதிபதி ஷிச்சின்பிங் நேற்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்களை கலந்துரையாடியுள்டளார் என் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான சீனாவின் போராட்டத்தின்போது முக்கியமான தருணங்களில் இலங்கை சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் சீனாவுக்கு தீவிர ஆதரவை வழங்கியதை சீன ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபயவின் வலுவான தலைமையின் கீழ் இலங்கை கொரோனா தொற்று நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட சீன ஜனாதிபதி , சீனா தொடர்ந்து இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இதன்போது சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் இலங்கையிலுள்ள சீன குடிமக்களை கவனித்துக்கொண்டதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சீன ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததோடு, சீன தரப்பும் தனது மண்ணில் உள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பையும் அவர்களின் சேமநலன்களையும் தொடர்ந்து பாதுகாத்து உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|