சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் – சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!

Wednesday, June 30th, 2021

திஸ்ஸமஹராமையில் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் சீன இராணுவத்தினரின் சீருடை போன்ற உடையணிந்து காணப்பட்ட விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண சீன தூதரகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் சீன இராணுவத்தை சேர்ந்தவர்கள் இல்லை என சீன தூதரகம் பாதுகாப்பு செயலாளரிடம் தெரிவித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் நிறுவனத்தின் சீருடையையே அணிந்திருந்தனர் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சீன இராணுவத்தினரின் சீருடை போன்ற உடைகளை ஊழியர்கள் அணிவதை தவிர்த்துக்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனத்தினரை கேட்டுக்கொள்ளுமாறு சீன தூதரகத்தை பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான சீருடைகளை அணியவேண்டாம் எனவும் உள்ளுர் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்

Related posts: