சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று நாட்டை வந்தடையும்!

Thursday, June 30th, 2022

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு தொகை அரிசி முன்னதாக கடந்த 25 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு அரிசி இன்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரசி 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கிவைக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: