சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிப்பு!

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் –
இலங்கை மற்றும் சாம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தம்மால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் சீனப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்த நம்பிக்கையான பதில் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை!
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர் நீக்கப்பட்டுள்ளனர் – இராஜாங்க அமைச்சர...
|
|