சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

Tuesday, March 16th, 2021

சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் இலஞச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலாநந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பான மோசடி அறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொள்வனவு செய்த பெறுமதியை காட்டிலும் குறைந்த விலையில் சதொசவினூடாக சீனியை விற்பனை செய்தமை தொடர்பிலும் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் சீனி வரிமோசடி தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

000

Related posts: