சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021

சீனி நெருக்கடிக்குத் தீர்வாக பிஸ்கட் மற்றும் பிற தொழில்களுக்கு கரும்பைப் பயன்படுத்த இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பாணி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் கரும்பு உற்பத்திக்குப் பயன்பட்ட முறைகள் பின்பற்றப்படும் என நம்புவதாகவும் இலங்கையில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தான் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்..

அத்துடன் காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: