சீனி, உப்புக்கு வரி அதிகரிக்கப்படும் : அமைச்சர் ராஜித!

Wednesday, December 7th, 2016

நாட்டின் தொற்றா நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் சீனி, உப்பு ஆகி­ய­வற்றின் வரியை அதிகரிப்போம். மேலும் ஜன­வரி முதல் இரத்தப் பரி­சோதனை அரச வைத்­தி­ய­சா­லை­களில் ஆரம்பிக்­கப்­படும் என சுகா­தார சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரி­வித்துள்ளார்.

புதிய வீதி ஒழுங்­கு­முறை வெற்றி அளித்­துள்­ள­மை­யினால் 25,000 ரூபா தண்டப் பணத்தை நீக்க வேண்டாம் என ஜனா­தி­ப­தி­யிடம் நான் வலி­யு­றுத்­தினேன். அத்­துடன் டெங்கு நோயா­ளர்­களின் எண்ணிக்கை 48000 ஆக அதி­க­ரித்­துள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்றுமுன்தினம் திங்­கட்­கி­ழமை வரவு – செலவுத் திட்­டத்தின் சுதேச வைத்­திய, சுகா­தார, போச­னத்­துறை அமைச்சு மீதான குழு­நிலை விவா­தத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாட்டின் சுகா­தாரச் சேவையை மேம்­ப­டுத்தும் நோக்­குடன் குடும்ப வைத்­திய முறை­மையை மேம்படுத்தத் திட்­ட­மிட்­டுள்ளோம் இதன் பிர­காரம் 50,000 பேருக்கு ஒரு வைத்­தி­யர் என நியமிக்கவுள்ளோம். இதன்­போது வீட்­டுக்கு வீடு சென்று வைத்­திய சேவையை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் ஜன­வரி மாதம் முதல் அரச வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே இரத்தப் பரி­சோ­தனை ஆரம்­பிக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம் தற்­போது நாட்டில் ஔடத பற்­றாக்­குறை முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­ளது.

சர்­வ­தேச அளவில் இலங்கை சுகா­தார சேவை முன்­னிலை வகிக்­கி­றது. தொற்றும் நோய்­களை பெரு­ம­ளவில் கட்­டுப்­ப­டுத்தி உள்ளோம். மலே­ரியா, நோய் நீக்­கப்­பட்டுள்­ளது. எனினும் டெங்கு, எயிட்ஸ் நோய் மாத்­தி­ரமே மீத­முள்­ளது. இவற்றில் எயிட்ஸ் நோய் பெரு­ம­ளவில் குறை­வ­டைந்­தது எனினும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டதன் கார­ண­மாக டெங்கு நோய்த் தாக்­கத்­திற்கு உள்­ளானோர் தொகை 48,000 ஆக அதி­க­ரித்­துள்ளது. இதே­வேளை, புற்­று­நோயை கட்­டுப்­படுத்த விசேட ஔடதம் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கி­றது. இதற்கு 90 இலட்சம் ஒதுக்க வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன் ஔடத பற்­றாக்­குறை தற்­போது நாட்டில் இல்லை. ஔடத பற்­றாக்­கு­றையை நீக்க விசேட மென்­பொருள் கட்­ட­மைப்பின் ஊடாக ஒன்லைன் திட்டம் மூலம் ஔட­தங்­களை வைத்­தி­ய­சா லைகளில் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இதே­வேளை, தனியார் வைத்­தி­ய­சாலை எல்­லை­மீ­றிய  கட்­டணம் சேவை­க­ளுக்கு பெறப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேவை­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலையை விதிக்கத் தீர்­மா­னித்­துள்ளோம்.

இதே­வேளை, தொற்றா நோயை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன் சீனி, உப்பு ஆகி­யவை மீதான வரியை அதி­க­ரிக்க வேண்டும் என 2015 ஆம் ஆண்டு வலி­யு­றுத்­தினேன். அப்­போது ஊட­கங்கள் விமர்­சனம் செய்­தன. ஆனால் இங்­கி­லாந்தில் 2014 இல் இம்­மு­றைமை நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. எனவே சீனி, உப்பு என்பவற்றின் வரியை அதி­க­ரிக்­க­வுள்ளோம்.

அதே­போன்று வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றாலும் பாரிய செலவு முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. புதிய ஒழுங்கு விதி­முறை மூல­மாக வீதி விபத்து 10 வீதம் குறை­வ­டைந்­தது. ஆகவே 25,000 ரூபா தண்டப் பணத்தை நீக்க வேண்டாம் என ஜனா­தி­ப­தி­யிடம் கோரினேன்.

அதே­போன்று அவ­சர சிகிச்சைப் பிரிவு உள்­ளிட்ட புதிய வைத்­தி­ய­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்துடன் கிராமப் புறங்களில் வைத்திய சிகிச்சைக்கூடங்களை நிறுவவுள்ளோம். அத்துடன் 25,000 ரூபா தண்டப் பணத்தை எதிர்த்தால் பஸ் உரிமையாளர்கள் சுகாதாரச் சேவைக்கு நிதி வழங்கட்டும் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டமைக்கு எம்மால் செலவிட முடியாது என்றார்.

tax

Related posts: