சீனா தொடர்பில் இலங்கை அவதானம்!

சீனாவுடன் இலங்கை இணைந்து செயற்படும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் ரியட் அட்மிரல் டொனால்ட் டி கெப்ரியல்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்து சமுத்திரம் உள்ளிட்ட பிராந்திய ரீதியாக ஏற்கனவே சீனா அனுபவித்த அனுகூலங்களை மீள ஒழுங்கமைப்பதன் ஊடாக, அதிக சாதக நிலைமைகளை உருவாக்கிக் கொள்ள சீனா முயற்சித்து வருகிறது.
அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பலத் தரப்பினரும் சீனாவுடன் இணைந்து செயற்படுகின்றன.சீனாவின் வேலைத்திட்டங்கள் குறித்து அமெரிக்காவிற்கு புலனாகாத மர்மங்கள் உள்ளன.எனவே இந்த விடயத்தில் இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது - அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்...
|
|