சீனா அரசால் இலங்கை மாணவருக்கு 5 பில்லியன் பாடசாலை சீருடை துணிகள் நன்கொடை !

இலங்கை மாணவர்களுக்காக 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை துணிகள் 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் 70% சீருடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
20 கொள்கலன்களில் 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் முடிவுப் பொருட்களைக் கொண்ட முதல் தொகுதி சீனாவில் இருந்து இலங்கை வந்துள்ளன.
சீனாவினால் வழங்கப்பட்டுள்ள முதல் தொகுதி பாடசாலை சீருடை துணிகளில் ஆண் மாணவர்களுக்கான மேற்சட்டை மற்றும் மாணவிகளுக்கான சீருடைக்குரிய வெள்ளை துணி (2,374,427.5 மீற்றர்), வெள்ளை காற்சட்டை துணி (350,031.5 மீற்றர்), நீல நிற காற்சட்டை துணி (150,003.5 மீற்றர்) மற்றும் செம்மஞ்சள் துணி (138,134 மீற்றர்) என்பன அடங்குவதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|