சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை!
Saturday, July 9th, 2016இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் ஹி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை துரிதமாக மேற்கொண்டு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர நன்றி தெரிவித்துள்ளார்.
தென் சீனக்கடல் தொடர்பான முரண்பாடுகளை அமைதியாக தீர்த்து கொள்வதன் அவசியத்தை அமைச்சர் மங்கள சமரவீர, சீன வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
|
|