சீனாவுடனான நட்புறவுகளை உறுதியாக நிலைநிறுத்த இலங்கை விரும்புகிறது – சீன வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் சிறந்த உறவுகளை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்புறவுகளை உறுதியாக நிலைநிறுத்துவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விரும்புவதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
யுவாங் வாங் 5 என்ற சீனக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்கான இராஜதந்திர அனுமதியை கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு கடந்த ஜூலை 12 ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக ஆலோசனைகள் காரணமாக குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் சிறந்த உறவுகளை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர்களான அலி சப்ரி, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இந்த சந்திப்பு கம்போடியாவில் நடைபெற்றிருந்தது.
இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையிலான இந்த முதலாவது சந்திப்பில், சீன வெளியுறவுக் கொள்கையில் நிலையான கோட்பாடாக இருக்கும் ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பை அமைச்சர் சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|