சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி!

Friday, September 30th, 2016

 

சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்துள்ளார்.மேலும் அபிவிருத்தி, முதலீட்டுத்துறை மற்றும் சர்வதேச மட்டத்திலும் சீனாமற்றும் இலங்கையின் உறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசானது இலங்கையுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வரும் அரசு என்றும்ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் கல்வித்துறை, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கானஅபிவிருத்தியில் சீனா வழங்கும் ஒத்துழைப்பானது அளப்பரியது என்றும்தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் ஜனாதிபதியாக பதவியேற்று முதன்முதலாக சீனா சென்றபோது அந்நாட்டு மக்களும்,அரசும் தனக்கு மிகுந்த வரவேற்பளித்ததாகவும்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக சீன பெற்றுத்தந்த சிறுநீரகவைத்தியசாலையானது இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

6t

Related posts: