சீனாவில் இருந்து தரமான பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
Wednesday, December 22nd, 2021தரமான பசளையை வழங்கவேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்களினதும் கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே சீனாவிலிருந்து வந்த பசளை கப்பல் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதேநேரம் சீனாவின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமியான பிணையும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்..
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறப்பர் மீள்நடுகை மற்றும் புதிய செய்கைகளுக்காக வழங்கப்படும் சலுகை முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், தற்போது இறப்பர் பயிர்ச்செய்கை தொடர்பாக மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டுகின்றனர். நீண்ட காலத்தின் பின்னர் இலங்கையின் இறப்பருக்கு தற்போது உயர்ந்த விலையொன்று கிடைக்கின்றது.
2021 ஆம் ஆண்டளவில் இறப்பர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை சாதனைமிக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..
அத்துடன் புதிய செய்கையை ஊக்குவிப்பதற்கும், மீள் செய்கையை ஊக்குவிப்பதற்கும் இதுவரைகாலமும் வழங்கப்பட்ட உதவித்தொகை, 08 தவணைகளாக, 07 வருடங்கள் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய யோசனையின் மூலம் இந்த உதவித்தொகை 5 தவணைகளில் 5 வருடங்களுக்குள் வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகலும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|