சீனாவின் நன்கொடை: நான்கு துறைகளுக்கு முன்னுரிமை!- பிரதமர்
Tuesday, April 12th, 2016அண்மையில் சின விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கிடைத்த நன்கொடை நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அதை நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
நல்லிணக்க செயற்பாடு முன்னெடுக்கப்படுவதனால், ஜூன் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்போம்.
அரசாங்கம், திணைக்களங்களுடன் மட்டுமே 1952ஆம் ஆண்டுகளில் தொடர்பு கொண்டிருந்த சீனா, தற்போது நிறுவன ரீதியில் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.கடலை நிரப்பி கட்டடம் அமைக்கப்படவிருந்த துறைமுக நகர்த் திட்டத்தை நிலத்தொடர்பின் ஊடாக முன்னெடுக்க கலந்துரையாடியுள்ளோம். இத்திட்டதில் யாரும் கைகோர்த்து கொள்ளலாம்.
ஹம்பாந்தோட்டை, மத்தல ஆகிய திட்டங்களை முன்னெடுத்த அந்நிறுவனம் கடனையும் சேர்த்து 2ஆம் கட்டத்தை முன்னெடுக்க, இணங்கியுள்ளது.இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அண்மித்த பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக 1,000 ஏக்கரை சீனாவுக்கு வழங்க உத்தேசித்துள்ளோம்.
இணைந்த நிறுவனச் செயற்பாட்டின் ஊடாக, 99 வருடகால குத்தகைக்கே இவை வழங்கப்படும் என்றார்.
Related posts:
|
|