சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, May 8th, 2021

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்றுமுதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2 மணிமுதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா அரசாங்கத்தால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஒரு பகுதி இந்நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: