சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் – தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீன தூதுரகம் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022

தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன.

இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: