சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனை ஒன்றினை மேற்கொள்வதற்கு சீன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த வாரத்தில் குறித்த தொகை நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனை நடவடிக்கையினூடாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!
யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா!
சுற்றுலாத்துறைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட சலுகையை நீடிக்க யோசனை - சுற்றுலாத்துறை அமைச...
|
|