சீனத் தூதுவர் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு – பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

Thursday, March 10th, 2022

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொவிட் 19 சவால்மிக்க சூழலில் சீன அரசு இலங்கைக்கு வழங்கும் பல்வேறு உதவிகளுக்கும் சபாநாயகர் அந்நாட்டு அரசுக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

இதன்போது நாடாமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: