சீதனக் கொடுமை வடக்கில் அதிகம் – இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016

வடக்கில் சீதனக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனியார் சட்டங்களால் பெண்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் திருமணம் முடிப்பதற்கான குறநை;தபட்ச வயதெல்லை 18 என்று நாட்டுச் சட்டம் கூறுகின்றது. ஆனால், அதனைவிடவம் குறைந்த வயதில் திருமணம் முடிக்கும் உரிமையை சரியா சட்டம் வழங்குகின்றது. சிறார் திருமணங்கள் தடுக்கப்படவேண்டும். காணி உரிமை தொடர்பான சட்டங்களும் பரீசிலிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டத்தி; மூலம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இன்று சில பகுதிகளில் (வடக்கு) சீதனக்கொடுமை அதிகரித்துள்ளது. சீதனம் வழங்காவிட்டால் திருமணம் இல்லை என்ற நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சீதனம் பெறும் நடவடிக்கையை இல்லாது ஒழிப்பதற்குரிய சட்டத்தை மகளிர் விவகார அமைசசு கொண்டு வர வேண்டும் – என்றார்.

9070255_orig

Related posts: