சிவனொளிபாதமலைக்கு 2 லட்சம் பக்தர்கள் படையெடுப்பு!

மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக இரண்டு லட்சம் யாத்திரிகள் சிவனொளிபாதமலைக்கு வருகை தந்துள்ளதாக நல்லதண்ணி பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.
02, 03 மற்றும் 04 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையினை முன்னிட்டு யாத்திரிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் வருகைதந்த யாத்திரிகள் ரட்னபுர மற்றும் ஹட்டன் வழியாக வருகை தந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாத்திரிகளின் வருகை அதிகரித்துள்ளமையினால் நல்லதண்ணியிலிருந்து மவுசாகலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரம் வாகான நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சிவனொளிபாதமலை உச்சியை சென்று சிவ தரிசனம் செய்ய முடியாத நிலையில் திரும்பியாதாக யாத்திரிகள் தெரிவித்தனர்.
மேலும் யாத்திரிகளின் நலன் கருதி பொலிஸ் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து நானுஓயா வரையில் விசேட ரயில் சேவையொன்றும் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து நல்லதண்ணி வரையில் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்று வருவதாக ஹட்டன் டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
|
|