சில நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, July 9th, 2019இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Related posts:
துறைமுக ஒப்பந்தத்தினைத் திருத்த முடியும் - மகிந்த சமரசிங்க
தொல்பொருள் உள்ள இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டம்!
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
|
|