சில தினங்களில் முடிவெடுக்கப்படும் – இராணுவத்தளபதி!

Friday, April 2nd, 2021

புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று அல்லது நாளை தமது முடிவுகளை வெளியிடுவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

குறிப்பாக புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் எவ்வாறான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும், எவ்வாறான விளையாட்டுக்களை முன்னெடுக்க வேண்டும் என்பவை இதில் அடங்கும்.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தமது நிலைப்பாட்டை தெரிவித்த பின் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

Related posts: