சில அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என தகவல்!

Wednesday, February 17th, 2021

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதியினால் இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, சமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சுகள் மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு உரித்தான நிறுவனங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியன தேசிய பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணி அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் காணப்படுகின்றன.

இதனடிப்படையில், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, அளவையியல் படமாக்கல் நிறுவனம், நில அளவைச்சபை, காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம், காணி குடியமர்வு திணைக்களம் ஆகியன காணி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவுத் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: