சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, February 9th, 2021

இலங்கையின் சிலோன் டீ நாமத்தில் உற்பத்தி செய்யப்படும் தூய்மையான தேயிலையை, சீனாவில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமொன்றை இலங்கை தேயிலை சபை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பில் சீனாவின் புஜியன் ஸ்டார் சைனா இன்டர்நெஸனல் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய, இணையதளம் ஊடாகவும், அதற்கு புறம்பாகவும் சிலோன் டீயை சீனாவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என தேயிலை சபை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: