சிலரது தவறான நடைமுறை – நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கு இழுக்கு – சபாநாயகர்!

சிலரது தவறான நடைமுறை காரணமாக பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு பாரிய இழுக்கு ஏற்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற செயலமர்வில் சபாநாயகர் உரையாற்றினார்.நாடாளுமன்ற ஊடகவியலாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீர்கொழும்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் இந்த தவறுகளை சரி செய்து சரியான வழியில் இட்டுச் செல்வது ஊடகவியலாளர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிலர் நாடாளுமன்றத்தில் முறைகேடாக நடந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை நிறுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டை நல்வழியல் இட்டுச் செல்வதற்கு நாடாளுமன்றம் வலுவூட்டப்பட வேண்டும். தெரிவு குழுக்களின் பங்களிப்புடன் கோப் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியல் யாப்பு ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் புதிய யுகம் ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளமை முன்னிட்டு ஒக்டோபர் மூன்றாம் திகதி சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் தலைமையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது. ழுழுமையான ஊடக மத்திய நிலையம் ஒன்று நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்படும். நாட்டின் நாடாளுமன்றம் சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டான நாடாளுமன்றமாக தரமுயர்த்துவதே இதன் நோக்கம் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
Related posts:
|
|