சிற்பக் கலாபூஷணம் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Monday, July 11th, 2016யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ். இராமநாதன் நுண்கலைத் துறையின் விரிவுரையாளருமான சிற்பச் சித்திர கலாநிதி கலாபூஷணம் அமரர் செல்லையா சிவப்பிரகாசம் அவர்களது பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அன்னார் நேற்று (10) காலை காலமானார். கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலியை செலுத்திய டக்ளஸ் தேவானந்தா அவரது பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
Related posts:
சிறுநீரக, இருதய நோயாளர்களுக்கான மருந்து ஊசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை - ஜீவன் தொண்டமான் தெரிவி...
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
|
|