சிற்பக் கலாநிதி சிவப்பிரகாசம் காலமானார்!
Monday, July 11th, 2016யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ். இராமநாதன் நுண்கலைத்துறையின் விரிவுரையாளருமான சிற்பச் சித்திர கலாநிதி கலாபூஷணம் செல்லையா சிவப்பிரகாசம் காலமானார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று (10)நேற்றுக் காலை காலமானார்
இலங்கையில் பிரசித்திபெற்ற சிற்பச் சித்திர கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக யாழ்.முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டஅமைந்தள்ளது.
அத்துடன் யாழ்.மத்திய கல்லூரி நிறுவுனரான அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச்சின் சிலை, வவுனியா பண்டாரவன்னியன் சிலை, அண்மையில் யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தைச் சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலை, வவுனியா நூலக வளாகத்தில் உள்ள சரஸ்வதி சிலை, வவுனியா புகையிரத நிலையத்தில் உள்ள பெண்ணின் சிற்பம், யாழ். மாநகரசபையில் உள்ள சேர்.பொன்.இராமநாதனின் சிலை, வெண்கலத்தினால் செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் சிலை என இருபத்திரெண்டுக்கும் மேற் பட்ட பிரபலங்களின் சிலைகளை அமைத்த பெருமை இவருக்கு உண்டு.
1928.06.21 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார் செல்லையா சிவப்பிரகாசம் 1952 ஆம் ஆண்டில் இருந்து 1966 ஆம் ஆண்டு வரை கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சித்திரம், சிற்பம் ஆகிய இரண்டினையும் கற்று சித்திர டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர்.பின்னர் யாழ்.மத்திய கல்லூரியில் சித்திர ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சித்திரப் பாடத்துறையை ஆரம்பித்தபோது அங்கும் சித்திரப்பாட விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இவர் ஜனாதிபதியின் தேசிய விருதான கலாபூஷணம் விருது உட்பட பன்னிரண்டுக்கும் மேலான தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார். 12 தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரனான இவர் 1996 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் சிற்பக் கலாநிதி பட்டம் பெற்றவர். மேலும் சிற்பக்கலாமணி, சிற்பச் சக்கரவர்த்தி, திருத்தொண்டர் மாமணி, ஆளுநர் விருது, ஜனாதிபதி விருது, ஆகியவற்றை பெற்றவர். கலைஞரது இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும்
Related posts:
|
|