சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 5th, 2021

சிறை கைதிகளுக்கு சைனோபாம் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெலிகடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நாட்டிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: