சிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரும் இடமாற்றம் – சுகாதார அமைச்சர்!

Thursday, March 2nd, 2017

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

சிறைச்சாலைகளில் கடமையாற்றி வரும் வைத்தியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்ற நபர்கள்களுக்கு விசேட சலுகைகள் வழங்கி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

செல்வாக்கு பெற்ற நபர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்படும் போது அவர்கள் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்து அவர்களை வைத்தியசாலைகளில் சேர்ப்பதற்கு சில மருத்துவர்கள் உதவியுள்ளனர். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்கு பின்னர் சுகாதார அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்றுள்ளது. இதேவேளை செல்வாக்குப் பெற்ற நபர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவுடன் அவர்களை உடனடியான வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவது குறித்து பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

download

Related posts: