சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கி பிரயோகம்: எவரும் கைது செய்யப்படவில்லை!

Friday, March 17th, 2017

களுத்துறை சிறைச்சாலையின் பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பாதாள உலக குழு தலைவர் சமயங் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சமயங் உட்பட 5 கைதிகள் களுத்துறை சிறையில் இருந்து கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்கள் சிறைச்சாலை பேருந்தை மறித்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 2 சிறையதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துடன் அங்கொட லொக்கா மற்றும் தென் பகுதியை சேர்ந்த பாதாள உலக குழு தலைவர் மதுஷ் ஆகியோரது குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts: