சிறைச்சாலை கொத்தணியால் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலி!

Wednesday, June 23rd, 2021

இதுவரையான காலப்பபுதியில் சிறைச்சாலை கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என கொவிட் பரவல் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட 12 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்றாவது கொவிட் அலை ஆரம்பித்ததிலிருந்து இதுவரை அக்கொத்தணியைச் சேர்ந்த 7 பேர் மரணித்துள்ளனர்.

தற்போது நாட்டில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 2 ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதில் 2 ஆயிரத்து 88 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: