சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு உடனடி இடமாற்றம்!

Wednesday, August 1st, 2018

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கடிதம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரியினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையான நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளின் செயல்திறன் நிலமையை கருத்திற் கொண்டும் சிறைச்சாலை திணைக்களத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் குறித்த இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts: