சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்!

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் சேவைகளின் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டு சிறைச்சாலை ஆணையாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றமையினால் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இரண்டு சிரேஷ்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும்கூடுதலாக சிரேஷ்ட மற்றும் உதவி சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளடங்க 14 அதிகாரிகளுக்கு இன்று முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம், வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு மற்றும் தும்பறை சிறைச்சாலை அதிகாரிகள் குழுவிற்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்!
உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு - வேலணை பிரதேச சபையின் உறுப்பின...
|
|