சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரிப்பு –  அமைச்சர் தலதா அத்துக்கோரள!

Monday, July 2nd, 2018

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறைச்சாலைகளில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பது தொடர்பாக கேள்வியெழுப்பியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் –  இலங்கையில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் நடக்கும் மோசடிகள் தொடர்பான ஏராளம் முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

சிறைக்கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தாத சில சிறைக்காவலா்கள் பாதாள உலகக்கும்பல்களின் உறுப்பினர்களுடன் நெருக்கமாக நடந்து கொள்கின்றனர். இது தொடர்பான தகவல்களும் எம்மிடம் உள்ளது.

இவற்றைத் தடுக்க வேண்டும் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிசாருடன் இணைந்து எமது அமைச்சு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts: