சிறைச்சாலைகளிலிருந்து 200 தொலைபேசிகள் மீட்பு!

Wednesday, June 12th, 2019

சிறைச்சாலைகளிற்குள் நடத்தப்பட்ட தேடுதலின் போது கடந்த ஆண்டில் 200 தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 213 தொலைபேசிகள், 268 சிம் கார்டுகள், 224 பக்கட் ஹெராயின், ஒரு பக்கெட் கேரளா கஞ்சா, எட்டு போதை மாத்திரைகள், 107 புகையிலை இலைகள், 78 சிகரெட்டுகள் மற்றும் 64,920 ரூபா பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை மீட்கப்பட்ட பொருட்களுடன் தொடர்புடைய மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் கைதாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் 1473 கைதிகள் விடுதலையாகியுள்ளனர். அதில் வெசாக் தினத்தில் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட 918 கைதிகளும் அடக்கம்.

மேலும் சிறைச்சாலையில் புனர்வாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த வருடம் மட்டும் 3.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யுத்தத்தால் அழிவடைந்து கிடந்த யாழ் மாவட்டத்தை தூக்கி நிறுத்தியவர்  டக்ளஸ் தேவானந்தா – தோழர் கி.பி!
சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் - ரஞ்சித் மத்தும பண்டார!
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த பிரதேச செயலர்!
கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு!
ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!