சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020

சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக குறித்த கைதிகளுக்கான தண்டனைகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அந்த தண்டனை 20 வருடங்கள் வரை குறைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், கைதிகளுக்கான தண்டனை குறைக்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் 22 வருடங்களுக்கு முன்னர் அது கைவிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: