சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி – உறவினர்களிடம் அறவீடு!
Friday, March 15th, 2019சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரீ.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சில சிறைச்சாலைகளில் கைதிகள் இரகசியமான முறையில் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கில் குடும்ப உறவினர்களுடன் மட்டும் தொடர்பு பேணக்கூடிய வகையிலான தொலைபேசி அழைப்பு வசதிகள் கைதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தபபட்டு வருகிறது.
சில நிமிடங்கள் உறவினர்களுடன் தொடர்பு பேணுவதற்கு கைதிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணங்கள் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அறவீடு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|