சிறைக்காவல்துறை பிரிவு ஸ்தாபிப்பு!

Friday, August 17th, 2018

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைக்காவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அண்மையில் கலைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை விடயங்களில் இந்த பிரிவை அதிகாரமிக்க உத்தியோகபூர்வ காவற்துறை பிரிவாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை காவற்துறை புலனாய்வு பிரிவு 2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

Related posts: