சிறைக்காவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!
Saturday, November 18th, 2017
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை அரச சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது.
அந்த வகையில் 1068 ஆண் சிறைக்காவலர்கள் மற்றும் 116 பெண் சிறைக்காவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களுக்கு 95 வீதம் திறந்த முறையிலும், சிறைச்சாலை திணைக்களத்தில் சேவையாற்றுவோர் 5 வீதமும் பணியாளர்கள் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாடங்கள் சித்தியடைந்த 18 – 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்க முடியும் எனவும், விண்ணப்ப முடிவுத்திகதி 18.12.2017 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விளம்பரங்களை இன்றைய தினம் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளமுடியும் என கூறப்பட்டுள்ளது
Related posts:
வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
அடுத்த வருட முற்பகுதியில் நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டை - அமைச்சர் நாம...
இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் - ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பத...
|
|