சிறு குற்றங்களுக்கான அபராதம் புதிய முறையில் அறவிடப்படும் – ஜனாதிபதி!

Friday, November 30th, 2018

போக்குவரத்து அபராதங்கள் உள்ளிட்ட சிறு குற்றங்களுக்கான அபராதத் தொகைகளை மின்னணுச் சாதனம் மூலம் அறவிடுவதற்கான சாத்தியம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பழைய காலாவதியான  முறைகளை நீக்கிப் புதிய முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts: