சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள்  – யாழ்.போதனாவின் பணிப்பாளர்!

Wednesday, July 25th, 2018

யாழ் மாவட்டத்தில் சிறுவர் மருத்துவமனை அமைக்க 5 கோடி (50 மில்லியன்) ரூபா தேவையாகவுள்ளது. அந்த நிதி நெதர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த விடயம் பேசப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்தில் சிறுவர் மருத்துவமனை அமைக்க 50 மில்லியன் (5கோடி) ரூபா தேவையாகவுள்ளது. மருத்துவமனைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த மருத்துவமனையை அமைப்பதற்கு நெதர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றிடம் கடன்பெறுவது தொடர்பாகக் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது தொடர்பான சகல விடயங்களும் சுகாதார அமைச்சின் ஊடாக அந்த நாட்டு நிறுவனத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

வடக்கு மாகாணத்துக்குரியதான இந்தச் சிறுவர் மருத்துவமனை இணுவில் சுமார் 4 ஏக்கர் காணியில் அமையவுள்ளது. அங்கு தற்போது தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: