சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைகள் நிறைவுற்றது!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பாக அறிவுறுத்தலுடன்,துஸ்பிரயோகங்களின் போது சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முறைகள் தொடர்பான நடவடிக்கைகயை அறிமுகப்படுத்தல் என்பனவே இந்த கொள்கைகள் தயாரித்ததன் நோக்கம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தேசிய மற்றும், மாகாண சபை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவளை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|