சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!
Thursday, January 10th, 2019சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்நேய மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவையாக இவை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் நேரடி கண்காணிப்புக்களை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேவையாற்றுபவர்களின் கல்வி தகைமை மற்றும் மனநிலை தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு வன்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்...
இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் - சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்...
|
|