சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் கொவிட் தாக்கம் – மருத்துவர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Friday, August 12th, 2022கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு வைரஸ் மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
51 பேர் டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, வீடு, பாடசாலை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு மருத்துவர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து கொரோனா ஒழிப்புக்கான நான்காவது பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை 71,388 பேர் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்காக மூன்றாவது தடுப்பூசியை 80,59,996 பேர் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தற்போது வழங்கப்பட்டுவரும் நான்காவது தடுப்பூசியை 71,388 பேரே பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நான்காவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதே வேளை, தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை நோக்கும்போது எதிர்காலத்தில் கொரோனா கொத்தணி உருவாகும் நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ள அந்த பிரிவு, நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|