சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழாம்!

Monday, September 26th, 2016

சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்புக்கு புறம்பாக நீதிபதிகள் குழாத்தினரை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் கூறினார்.

இதனடிப்படையில் பொலிஸ் பிரிவிலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விசேட பிரிவினரை உருவாக்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

child

Related posts: