சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் -சுகாதாரப் பிரிவு!

Monday, May 28th, 2018

நிலவும் மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்களும், நோய்களும் பரவக்கூடிய அனர்த்தம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரப் பிரிவு சிறுவர்கள் வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்தள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் உடம்பில் கொப்பளங்கள் போன்ற நோய் குணங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும், பொலத்தீன் வகைகளையும், சுற்றாடல் பகுதியில் வீசி எறிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எத்தகைய சுகாதார பிரச்சினைகளுக்கும் உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது.

பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு 24 மணித்தியாலமும் இதற்கென சுகாதார அமைச்சுடன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 071- 01 07 107 ஆகும்.

Related posts: