சிறுவர்களைத் தாக்கும் வைரஸ் காய்ச்சல்! பெற்றோரே எச்சரிக்கை!

Sunday, March 3rd, 2019

நாட்டில் கடந்த சில நாட்களாக பரவும் வைரஸ் காய்ச்சலானது, தற்போது சிறுவர்களுக்கும் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இந்த வைரஸ் தாக்கத்தினால் வெண்குருதி சிறுதுணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்களின் அளவில் குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு காய்ச்சல் நிலைமை இருக்குமாயின் வெண்குருதி சிறுதுணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்களின் அளவை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களை, ஓய்வாக வைத்திருத்தல் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குவதன் ஊடாக, இந்த வைரஸ் தாக்கத்தைக் தவிர்க்கலாம் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts: