சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிப்பு!

Wednesday, October 20th, 2021

சிறுவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன்மூலம் இளந்தவறாளர்கள் பயிற்சிப் பாடசாலைகள் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதலில் வகுக்கப்பட்டிருந்த 18 என்ற வயதெல்லை 18 இருந்து  22 எனத் திருத்தப்படுகிறது. பாலியல் நடுநிலையைப் பேணுவதும் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்.

மேலும் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் ஊடாக பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கெதிராக மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக தடுத்து வைத்தல் நிறுவனமொன்றில் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: