சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !
Sunday, July 4th, 2021சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன. இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்குமாறு சிறுவர் அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!
போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல - ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர...
வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
|
|