சிறுவர்களுக்கான உகந்த இடங்களை உருவாக்கவேண்டும்! -ஜனாதிபதி

Saturday, October 1st, 2016

குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து இடங்களும் சிறுவர்களுக்கு உகந்த இடங்களாக மாற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் இருந்து விடுபட்ட நாடாகஇலங்கையை உருவாக்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதியவர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுடன் கௌரவத்தைபாதுகாப்பது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithiripala-55445d1

Related posts: